கடலூர் மாவட்டத்தை புறக்கணித்த மத்திய நிபுணர் குழுவிற்கு பாஜக கண்டனம்!
சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி மத்திய நிபுணர் குழு வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை புறக்கணித்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக காவிரி டெல்டாவின் கடை மடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்காக்களில் காவிரி மூலம் சுமார் 1 லட்சத்து 26
வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்துள்ள மத்திய நிபுணர் குழு கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை புறக்கணித்ததுள்ளது கண்டிக்கத்தக்கது என பாரதிய ஜனதா கட்சி தேசிய பொதுக்குழு உறுப்பினரும், காவிரி டெல்டா விவசாய விளைபொருள்கள் பாதுகாப்பு சங்க துணைத் தலைவருமான வி.கண்ணன்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது:
சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி மத்திய நிபுணர் குழு வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை புறக்கணித்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக காவிரி டெல்டாவின் கடை மடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்காக்களில் காவிரி மூலம் சுமார் 1 லட்சத்து 26 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. காவிரியில் போதிய நீர் வரத்து இல்லாததாலும், பருவ மழை பொய்த்ததாலும் பூக்கும் தருணத்திலும், கதிர் முத்தும் தருணத்திலும் நீரின்றி சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிர்கள் காய்ந்து போய்விட்டன.இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர்.
சென்ற முறை தமிழகத்திற்கு கர்நாடகம் நீரை திறந்துவிடாததால் ஆய்விற்காக வந்த மத்தியக்குழுவும் கடலூர் மாவட்டத்தை பார்க்காமல் புறக்கணித்துவிட்டது. மேலும் கடலூர் மாவட்டத்தில் டெல்டா அல்லாத பிற வட்டங்களில் ஆழ்குழாய் கிணறு மூலம் பாசனம் நடைபெறுகிறது. இந்த வயல்கள் கரும்பு, மணிலா, எள் உள்ளிட்ட பணப் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. கடுமையான வறட்சியை தாங்கக்கூடிய சவுக்கை போன்ற பயிர்கள் கூட நீரின்றி காயத்தொடங்கியுள்ளது. மின்சாரம் ஒருநாளைக்கு 3 மணி முதல் 6 மணி நேரம் தான் வழங்கப்படுகிறது. அதுவும் தொடர்ச்சியாக வழங்கப்படுவதில்லை. இதனால் மணிலா, எள், கரும்பு போன்ற பயிர்கள் நீரின்றி காயத்தொடங்கியுள்ளதால் உற்பத்தி செய்யும் பொருளை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் தத்தளிக்கின்றனர். கடும் மின்வெட்டால் கிராமங்களில் உள்ள மேல்நிலைத்தொட்டிகளில் நீர் ஏற்ற முடியாமல் குடிநீருக்காக மக்கள் அள்ளல்பட்டு வருகின்றனர். இவற்றையெல்லாம் நேரில் ஆய்வு செய்ய மத்திய நிபுணர் குழு பார்க்க வராதது கண்டனத்திற்குரியது என வி.கண்ணன்பிள்ளை தெரிவித்துள்ளார்.