முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் : இரவு பேருந்து இயக்கப்படாததால் காவல்நிலையம் முற்றுகை

சிதம்பரத்தில் இரவு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் சிதம்பரம் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் போலீஸார் பாதுகாப்பு அளித்து பேருந்துகள் இயக்கப்பட்டன.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:40 AM
பகிர்:

சிதம்பரத்தில் இரவு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் சிதம்பரம் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் போலீஸார் பாதுகாப்பு அளித்து பேருந்துகள் இயக்கப்பட்டன.

புதுச்சேரியிலிருந்து காரைக்கால் செல்லும் அரசு பேருந்து, சிதம்பரத்திலிருந்து கும்பகோணம்,  மயிலாடுதுறை செல்லும் அரசு பேருந்து, சென்னையிலிருந்து கும்பகோணம் செல்லும் அரசு பேருந்து ஆகிய பேருந்துகள் வெள்ளிக்கிழமை இரவு சிதம்பரம் பஸ் நிலையம் வந்தடைந்தது. ஆனால் இரவு நேரத்தில் பேருந்துகள் இயக்க முடியாது என போக்குவரத்துக்கழக அதிகாரிகளும், டிரைவர், கண்டக்டர் தெரிவித்தனர்.

ஆனால் பயணிகள் பேருந்தை இயக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மறுத்ததால் சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு வந்த பயணிகள் குழந்தைகளுடன் சுமார் 1 மணி நேரம் முற்றுகையிட்டு பேருந்துகளை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க வலியுறுத்தினர். பின்னர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகளை சிதம்பரம் அருகே கொள்ளிடம் பாலம் வரை சென்று அனுப்பி வைத்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments