குறைந்த மின்அழுத்தம்: பொதுமக்கள், வியாபாரிகள் அவதி
கடந்த சில தினங்களாக காற்றாலை மின்சாரம் அதிகம் கிடைப்பதால் சிதம்பரம் நகரில் இரவு நேரங்களில் மின்வெட்டு செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 12 மணி நேரம் மின்வெட்டு தற்போது 6 மணி நேரமாக குறைந்துள்ளது. இருப்பினும் கடந்த சில தினங்களாக குறைந்த மின்அழுத்தத்தால் டியூப்
சிதம்பரம் நகரில் மின்வெட்டுடன், குறைந்த மின்அழுத்தம் சேர்ந்துள்ளதால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த சில தினங்களாக காற்றாலை மின்சாரம் அதிகம் கிடைப்பதால் சிதம்பரம் நகரில் இரவு நேரங்களில் மின்வெட்டு செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 12 மணி நேரம் மின்வெட்டு தற்போது 6 மணி நேரமாக குறைந்துள்ளது. இருப்பினும் கடந்த சில தினங்களாக குறைந்த மின்அழுத்தத்தால் டியூப் லைட்டுகள் எரிவதில்லை. பல இடங்களில் டியூப்லைட் பியூஸ் போய்விடுகிறது. குறைந்த மின்அழுத்தத்தால் மின்விசிறியின் காயில் புகைந்து விடுவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே மின்வெட்டை அனுபவித்து வரும் சிதம்பரம் நகர மக்களும், வியாபாரிகளும் குறைந்த மின்அழுத்தத்தால் மேலும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்ட போது காற்றாலை மின்சாரம் தற்போது வழங்கப்படுவதால் குறைந்த மின்அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.