அண்ணாமலைப் பல்கலை. படிப்பு மையங்களில் நுழைவுத்தேர்வு விண்ணப்பங்கள் விற்பனை!
பல்கலைக்கழக நிர்வாக கட்டட அலுவலகத்தில் தொலைதூரக்கல்வி இயக்கத்தின் படிப்பு மையங்களைச் சேர்ந்த பொறுப்பு அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பதிவாளர் என்.பஞ்சநதம், தமிழகஅரசால் நியமிக்கப்பட்டு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக 60 படிப்பு மையங்களிலும் பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை, எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பி.ஃபார்ம் ஆகியவற்றிற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
பல்கலைக்கழக நிர்வாக கட்டட அலுவலகத்தில் தொலைதூரக்கல்வி இயக்கத்தின் படிப்பு மையங்களைச் சேர்ந்த பொறுப்பு அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பதிவாளர் என்.பஞ்சநதம், தமிழகஅரசால் நியமிக்கப்பட்டு பல்கலைக்கழக உதவி நிர்வாக அலுவலர்களாக பணியாற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கிருஸ்துராஜ், தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் மற்றும் படிப்பு மைய பொறுப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 60 படிப்பு மையங்களிலும் எவ்வித புகாரின்றி நுழைவுத்தேர்வு விண்ணப்பங்களை விற்பனை செய்ய வேண்டும். விண்ணப்பங்களை வருகிற மே 28-ம் தேதி வரை வழங்க வேண்டும். தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலான எண்ணிக்கையில் மாணவர்களை சேர்க்கை செய்ய வேண்டும் என பொறுப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பிஇ., பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பம் ரூ.400, எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு ரூ.200-ம், எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பி.ஃபார்ம் ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பம் ரூ.200 ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே.28-தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை www.annamalaiuniversity.ac.in என்ற முகவரியில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதற்குண்டான தொகையை வரைவோலையாக இணைத்து அனுப்பலாம்.
நுழைவுத்தேர்வு நடைபெறும் நாட்கள் விபரம்:- பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை- ஜூன் 8-ம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணிவரை பேப்பர்-1 பயாலஜி, மதியம் 2 மணி முதல் 5 மணி வரை பேப்பர்-2 பிசிகல் சயன்ஸ், ஜூன் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை பேப்பர்-3 கணிதம். எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பி.ஃபார்ம் -ஜூன் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை பேப்பர்-1 பயாலஜி, மதியம் 2 மணி முதல் 5 மணி வரை பேப்பர்-2 பிசிகல் சயன்ஸஸ்.