சிதம்பரத்தில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு! ஒருவர் கைது
சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த அரசு பஸ்ஸின் கண்ணாடியை சிதம்பரம் புறவழிச்சாலையில் பிரம்மராயர் கோயில் அருகே இருநபர்கள் கல்வீசி தாக்கியதில் முன்புறக் கண்ணாடி உடைந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஒருவரை
சிதம்பரத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு புறவழிச்சாலையில் அரசு பஸ்ஸின் கண்ணாடி கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டது. பஸ் மீது கல்வீசியை வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த அரசு பஸ்ஸின் கண்ணாடியை சிதம்பரம் புறவழிச்சாலையில் பிரம்மராயர் கோயில் அருகே இருநபர்கள் கல்வீசி தாக்கியதில் முன்புறக் கண்ணாடி உடைந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஒருவரை சுற்றிவளைத்து பிடித்தனர். தகவல் அறிந்த சிதம்பரம் தாலுக்கா போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பஸ் மீது வீசி தாக்கியதால் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட ராகவேந்திரா நகரைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்ற இளைஞரை கைது செய்தனர். தப்பிஓடிய தாண்டவன்குளத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞரை தேடி வருகின்றனர்.