வன்னியர் சங்க கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது!
பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடந்த மே 1-ம் தேதி பி.முட்லூரில் வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் செல்வமகேஷ் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். பரங்கிப்பேட்டை போலீஸார் செல்வமகேஷ் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். நீதிமன்றத்தில்
சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த வன்னியர் சங்க கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் செல்வ மகேஷ் (31) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடந்த மே 1-ம் தேதி பி.முட்லூரில் வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் செல்வமகேஷ் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். பரங்கிப்பேட்டை போலீஸார் செல்வமகேஷ் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமின் பெற்று வெளிவந்த இவர் காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்து போடுவதில்லை எனவும், இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் கேட்டதற்கு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து செல்வமகேஷை மீண்டும் கைது செய்து சிறையிலடைத்தனர்.
தொடர் சம்பவத்தில் ஈடுபட்டு வரும் செல்வமகேஷை ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையிலடைக்க வலியுறுத்தி மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா, மாவட்ட ஆட்சியருக்கு கோப்புகளை அனுப்பி வைத்தார். கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார், செல்வமகேஷை ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையிலிடைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் செல்வமகேஷ் இன்று மாலை சிறையில் அடைக்கப்பட்டார்.