முகப்பு
தற்போதைய செய்திகள்

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி வண்டலூரில் பஸ் நிலையம் வருமா: கருணாநிதி

கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பஸ்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாலும் வண்டலூர் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:45 AM
பகிர்:

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி வண்டலூரில் பஸ் வரப்போகிறதா என முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:-

கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பஸ்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாலும் வண்டலூர் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் அறிவித்தார்.

இந்த பஸ் நிலையத்துக்கு வண்டலூர் பகுதி விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்த அறிவிப்பு வந்தவுடன், வேளச்சேரியிலும், மாதவரத்திலும் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட திட்டம் என்னவாயிற்று என்று கேட்டிருந்தேன்.

இந்நிலையில் வேளச்சேரியில் வெளியூர் பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.1985-ம் ஆண்டு வண்டலூர் உயிரியல் பூங்காவை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார்.அப்போது எம்.ஜி.ஆர்.,வண்டலூரில் சாலை விரிவாக்கத்துக்காகவும், உயிரியல் பூங்கா அமைக்கவும் பல ஏக்கர் நிலங்களை அரசு கையப்படுத்தியுள்ளது. இனி ஒரு நிலம்கூட வண்டலூரில் எடுக்கப்பட மாட்டாது என்று தெரிவித்தார்.எனவே வண்டலூரில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி அங்கு புறநகர் பஸ் நிலையம் வரப் போகிறதா என்றும், வேளச்சேரி, மாதவரம் புறநகர் பஸ்நிலையங்கள் கதி என்ன என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →