முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு: தமிழகத்தில் 7 மையங்களில் நடைபெறுகிறது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை, எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பி.ஃபார்ம் ஆகியவற்றிற்கான நுழைவுத் தேர்வு தமிழகத்தில் அண்ணாமலைநகர், சென்னை

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:46 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை, எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பி.ஃபார்ம் ஆகியவற்றிற்கான நுழைவுத் தேர்வு தமிழகத்தில் அண்ணாமலைநகர், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய 7 மையங்களில் வருகிற ஜூன் 7,8,9 தேதிகளில் நடைபெறுகிறது என பதிவாளர் ந.பஞ்சநதம் அறிவித்துள்ளார்.

பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ஜூன் 8-ம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணிவரை பேப்பர்-1 பயாலஜி தேர்வும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை  பேப்பர்-2 பிசிகல் சயன்ஸ் தேர்வும், ஜூன் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை பேப்பர்-3 கணிதம் தேர்வும் நடைபெறுகிறது.

எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பி.ஃபார்ம் ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ஜூன் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை பேப்பர்-1 பயாலஜி தேர்வும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை பேப்பர்-2 பிசிகல் சயன்ஸஸ் தேர்வும் நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →