முகப்பு
தற்போதைய செய்திகள்

சகஜானந்தா பெயரில் மகளிர் கல்லூரி நிறுவ தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை

நாட்டுக்கும், மக்களுக்கும் பாடுபட்ட சான்றோர்களுக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புவது சரியானதே. அந்த வகையில் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சிக்கு பாடாற்றிய கல்வி வள்ளல் சுவாமி சகஜானந்தருக்கு சிதம்பரத்தில் மணி மண்டபம் கட்டப்படும் தமிழக அரசின் வரவேற்கத்தக்கதே. ஆனால் சுவாமி சகஜானந்தா

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:46 AM
பகிர்:

சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா பெயரில் மகளிர் கல்லூரி தொடங்க வேண்டும் என தமிழத் தேசப் பொதுவுடைமைக்கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

நாட்டுக்கும், மக்களுக்கும் பாடுபட்ட சான்றோர்களுக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புவது சரியானதே. அந்த வகையில் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சிக்கு பாடாற்றிய கல்வி வள்ளல் சுவாமி சகஜானந்தருக்கு சிதம்பரத்தில் மணி மண்டபம் கட்டப்படும் தமிழக அரசின் வரவேற்கத்தக்கதே. ஆனால் சுவாமி சகஜானந்தா கனவை நனவாக்கும் வகையில் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் தலைமுறை, தலைமுறையாக பயன் பெறும் வகையில் அரசு மகளிர் கல்லூரி ஒன்றை அவரது பெயரில் உருவாக்குவது கூடுதல் பயன்படக்கூடிய செயலாகும். சிதம்பரத்தில் உள்ள நந்தனார் பள்ளி கல்வி வளாகத்தில் பயன்படுத்தப்படாத திறந்த இடங்களும், கட்டடங்களும் ஏராளமாக உள்ளன. இதைப் பயன்படுத்தி சுவாமி சகஜானந்தா பெயரில் பெண்களுக்கான அரசு கல்லூரி ஒன்றை நிறுவி ஆதிதிராவிடர் வகுப்பு பெண்கள் முன்னுரிமை பெரும் வகையில் தமிழகஅரசு அனைவருக்கும் கல்வி அளிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →