முகப்பு
தற்போதைய செய்திகள்

முதல் பட்டதாரி சான்று: வட்டாட்சியர் அலுவலகங்களில் குவியும் மாணவர்கள் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்பு படிப்பதற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.இந்த விண்ணப்பங்களில் கோரியுள்ள ஜாதி, வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றுகளும், இவற்றுடன் முதல்

Updated On : 16 மே, 2013 at 5:21 PM
பகிர்:

முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்காக வட்டாட்சியர் அலுவலகங்களில் மாணவர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்பு படிப்பதற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.இந்த விண்ணப்பங்களில் கோரியுள்ள ஜாதி, வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றுகளும், இவற்றுடன் முதல் பட்டதாரிக்கான சான்றிதழ்களையும் இணைக்க வேண்டியுள்ளதால், இந்த சான்றிதழ்களை பெற்றிட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் வட்டாட்சியர் அலுவலங்களில் குவிந்து வருகின்றனர்.

மக்கள் கூட்டத்தைத் தவிர்க்கும் பொருட்டு ஜாதி, இருப்பிடம் மற்றும் வருமான சான்றிதழ்கள் வழங்க தனியாக துணை வட்டாட்சியர் தலைமையில் ஒரு பிரிவும், முதல் பட்டதாரி சான்றிதழ் வழங்க மண்டல துணை வட்டாட்சியர் தலைமையில் ஒரு பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இருப்பினும், உயர் கல்வி சேர்வோர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், அதற்கான சான்றுகள் பெற வருவோர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதனைத் தவிர்க்க கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.