முகப்பு
தற்போதைய செய்திகள்

83 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர விடியல்: பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன்

83 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு சுதந்திர விடியல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்துள்ளது. இது பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு கிடைத்த விடியலாகும், கடலூர் மாவட்ட மக்களுக்கு கிடைத்த

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:46 AM
பகிர்:

83 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு சுதந்திர விடியல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்துள்ளது. இது பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு கிடைத்த விடியலாகும், கடலூர் மாவட்ட மக்களுக்கு கிடைத்த விடியலாகும் என அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன் தெரிவித்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் சட்டதிருத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்த பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினரின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு பல்கலைக்கழக சட்டதிருத்தம் செய்யப்பட்டு அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதற்கு மிக்க மகிழ்ச்சியடைகிறோம். சட்ட திருத்தம் மூலம் பல்கலைக்கழகத்தில் பதவி உயர்வு, நிறுத்தப்பட்டு சலுகைகைள், நீண்ட காலமாக பணியாற்றும் என்எம்ஆர் மற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்துவது உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கே புதிதாக பதவி ஏற்றுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் எடுத்து வருகின்ற அதிரடியான பல்வேறு வளர்ச்சிக்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும் என நாங்கள் நம்புகிறோம்.

விரைவாக புதியதாக சட்டம் இயற்றப்பட்டு, புதிய துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்டு, புதிய சிண்டிகேட், செனட் அமைப்பு உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அதன் மூலம் புதிய பரிணாமத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் காண உள்ளது. இனிமேல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஊழல் என்ற சொல் அழிக்கப்பட்டுவிடும் சூழ்நிலை இங்கு நிலவுகிறது. ஊழியர்கள் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடன் பணியாற்றும் நிலையை தமிழக முதல்வர் ஏற்படுத்தியுள்ளார். அதற்கு அண்ணாமலைப் பல்கலைக்க ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

போராடத்தின் வெற்றிக்காகவும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், பாராட்டு தெரிவித்தும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரைவில் பாராட்டுவிழா நடத்த இருக்கிறோம். விழாவிற்கு தமிழக முதல்வர், பல்கலைக்கழக இணைவேந்தராக பொறுப்பேற்கவுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரை சிறப்பு விருந்தினராக அழைக்கவுள்ளோம். அதோடு மட்டுமல்லாமல் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், பல்வேறு தொழிற்சங்கத்தினரை அழைத்து பாராட்டுவிழாவை நடத்தவுள்ளோம். இந்த நிகழ்வு 83 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு சுதந்திர விடியல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்திருப்பது விளைவாக மிகப்பெரிய நினைவுத்தூனை நாங்கள் அமைக்கவுள்ளோம். இந்த விடியல் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு கிடைத்துள்ள விடியல், சிதம்பரத்திற்கே கிடைத்துள்ள, கடலூர் மாவட்டத்திற்கே கிடைத்துள்ள விடியலாகும். இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றியாகும் என அவர் தெரிவித்தார்.

அப்போது ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ரவி உடனிருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →