முகப்பு
தற்போதைய செய்திகள்

சங்கராபுரத்தில் திமுக நகரச் செயலாளர் கொலை : உறவினர்கள் சாலை மறியல்

சங்கராபுரத்தில் திமுக நகரச் செயலளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் உண்மைக் குற்றவாளிகைளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:47 AM
பகிர்:

சங்கராபுரத்தில் திமுக நகரச் செயலாளர் கொலை : உறவினர்கள் சாலை மறியல்

சங்கராபுரத்தில் திமுக நகரச் செயலளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் உண்மைக் குற்றவாளிகைளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சங்கராபுரத்தைச் சேர்ந்த கோதண்டபாணியின் மகன் முனுசாமி என்கிற சதீஷ் சந்திரன் (38). நகர திமுக செயலாளராக இருந்த இவர், சங்கரபுரம் முன்னாள் பேரூராட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் சங்கராபுரத்தில், கள்ளக்குறிச்சி பிரதான சாலையில் சதீஷ் சந்திரன் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.  இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குற்றவாளிகள் யார் என்பது குறித்து காவல்துறையிடம் புகார் செய்துள்ளனர். இருந்தும், காவல்துறை குற்றவாளிகளைக் பிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் சந்திரனின் குடும்பத்தினர், சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும், உண்மைக் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், காவல்துறை ஆய்வாளர் கண்ணனை இடமாற்றம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்களை முன்வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் தகவலறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கொலை செய்யப்பட்ட திமுக நகரச் செயலாளர் வழக்கை துரிதமாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், சாலை மறியல் கைவிடப்பட்டது.

இந்த மறியலால் அப்பகுரியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →