முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு!

பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சிதம்பரம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பின்னர் ராமதாஸ் ஜாமினில் வெளிவந்த பின்னரும் பஸ் மீது

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:47 AM
பகிர்:

சிதம்பரம் அருகே அரசு பஸ்மீது மர்மநபர்கள் இருவர் கல்வீசி தாக்கியதில் முன்புறக் கண்ணாடி உடைந்தது.

பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சிதம்பரம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பின்னர் ராமதாஸ் ஜாமினில் வெளிவந்த பின்னரும் பஸ் மீது கல்வீசி தாக்கி கண்ணாடி உடைக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில்  நேற்று(வியாழக்கிழமை) இரவு கடலூரிலிருந்து புதுச்சத்திரம் நோக்கி வந்த அரசு பஸ் மீது மேட்டுப்பாளையம் வளைவு அருகே சாலையோர மரத்தில் பதுங்கி இருந்த மர்மநபர்கள் இருவர் கல்வீசி தாக்கிவிட்டு தலைமறைவாயினர். இதில் பஸ்ஸின் முன்புறக் கண்ணாடி உடைந்தது. பஸ் ஓட்டுநர் செல்லக்குமார் இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த அருள் (23), அருள்குமார் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →