அண்ணாமலைப் பல்கலை. விலங்கியல் துறையில் முதல் முறையாக முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி!
பல்கலைக்கழக விலங்கியல்துறையில் உள்ள ஹெடெக் ஹாலில் நடைபெற்ற விழாவிற்கு முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஆர்.ஞானதேவன் வரவேற்றார். பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம், சிதம்பரம் உதவி ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், விலங்கியல் துறைத் தலைவர் செல்வி சபாநாயகம் ஆகியோர்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விலங்கியல் துறையில் முதல் முறையாக 1986-88ல் பயின்ற முன்னாள் மாணவர்களின் வெள்ளிவிழா சந்திப்பு சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
பல்கலைக்கழக விலங்கியல்துறையில் உள்ள ஹெடெக் ஹாலில் நடைபெற்ற விழாவிற்கு முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஆர்.ஞானதேவன் வரவேற்றார். பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம், சிதம்பரம் உதவி ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், விலங்கியல் துறைத் தலைவர் செல்வி சபாநாயகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் முன்னாள் ஆசிரியர்கள் வி.சுப்பையா, என்.ராமலிங்கம், கே.வீரராகவன் ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். முடிவில் முன்னாள் மாணவர் சங்கச் செயலாளர் எஸ்.மணி நன்றி கூறினார்.
முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் 86-88ல் பயின்ற முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகள் கழித்து குடும்பத்தினருடன் சுமார் 130 பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மாணவர்கள் தாங்கள் பயின்ற காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். தற்போது தாங்கள் பணியாற்றும் இடம் மற்றும் வாழ்க்கை முறையை பற்றி பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் மதியம் சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதிக்கு சென்று படகு சவாரி செய்தனர்.