முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கை அகதிகள் முகாமில் உள்ள மாணவர்கள் தத்தெடுப்பு: காங்கிரஸ்

சிதம்பரம் தெற்குவீதி அறுபத்துமூவர் மடத்தில் ராஜீவ்காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நகர காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.  கூட்டத்திற்கு நகரத் தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு முன்னாள் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:48 AM
பகிர்:

காட்டுமன்னார்கோயில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள மாணவர்களை காங்கிரஸ் கட்சி தத்தெடுத்து உயர்கல்வி படிப்பு வரை உதவி செய்யும் என காங்கிரஸ் கட்சி பிரமுகரும்,  நவசக்தி பில்டர்ஸ் நிர்வாக இயக்குநருமான கே.ஐ.மணிரத்தினம் தெரிவித்தார்.

சிதம்பரம் தெற்குவீதி அறுபத்துமூவர் மடத்தில் ராஜீவ்காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நகர காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.  கூட்டத்திற்கு நகரத் தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு முன்னாள் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ரஜினிகாந்த், மாவட்ட துணைத் தலைவர் ராஜா.சம்பத்குமார், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் துரை.சிங்காரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்டுமன்னார்கோயில் வட்டார காங்கிரஸ் தலைவர் கே.வி.இளங்கீரன் வரவேற்றார்.

கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பிரமுகரும், நவசக்தி பில்டர் நிர்வாக இயக்குநருமான கே.ஐ.மணிரத்தினம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது: 

மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி 22வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலிருந்து மே 19-ம் தேதி காலை எனது தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஜோதி ஊர்திப்பயணமாக புறப்பட்டு காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், கடலூர்,  விழுப்புரம, செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில் வழியாக ஶ்ரீபெரும்புதூரை மே 22-ம் தேதி சென்றடைகிறது. அங்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் ஆகியோர் ஜோதியை பெற்றுக் கொள்கின்றனர். ஊர்திப் பயணத்தின் போது மத்தியஅரசின் சாதனைகளை விளக்கியும், இலங்கை தமிழர்களுக்கு மத்தியஅரசு செய்த உதவிகள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் மக்களிடம் விநியோக்கப்படும் என கே.ஐ.மணிரத்தினம் தெரிவித்தார். கூட்டத்தில் கட்டாரி சந்திரசேகரன், மகளிரணி ராஜலட்சுமி, சிவசக்திராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →