ஆரணி மின்வாரிய கோட்டத்தில் திருட்டு மின்சாரம் பயன்படுத்தியவர்களிடமிருந்து சுமார் 2 லட்சம் அபராதம் வசூல்.
ஆரணி மற்றும் கண்ணமங்கலம் மின்பிரிவில் திருட்டுதனமாக மின்சாரத்தை பயன்படுத்திய நபர்களிடமிருந்து ரூ.1லட்சத்து 99ஆயிரத்து 412 அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஆரணி மற்றும் கண்ணமங்கலம் மின்பிரிவில் திருட்டுதனமாக மின்சாரத்தை பயன்படுத்திய நபர்களிடமிருந்து ரூ.1லட்சத்து 99ஆயிரத்து 412 அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஆரணி மற்றும் கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியிலும் சுற்றியுள்ள பகுதியிலும் வீடுகள், கடைகள், வியாபார நிறுவனங்களில் உள்ள மின் இணைப்புகளில் மின்வாரியஉதவிசெயற்பொறியாளர் திருநாவுக்கரசு தலைமையில் மின்சாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் மின்சார சட்டத்திற்கு புறம்பாக மின்வாரிய விதிமுறைகளை மீறி மின்திருட்டு, கூடுதல் மின்பளு பயன்படுத்தியது, ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கும், ஒரு கடையின் மின் இணைப்பிலிருந்து கடை கட்டுவதற்கு மின் இணைப்பினை முன் அனுமதியின்றி பயன்படுத்தியது உள்ளிட்டவைகள் தெரியவந்தது. மேலும் விவசாய மின் இணைப்பிற்கு அனுமதிக்கப்பட்ட மின்பளுவை தவிர கூடுதல் மின்பளு பயன்படுத்தியது, முறையின்றி கட்டுமான பணிகளுக்கு மின்சாரம் திருடியது உள்பட பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன.
Advertisement
இவ்வாறு மின்சாரத்தை பயன்படுத்திய நபர்களிடமிருந்து அபராதத்தொகையாக மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 99ஆயிரத்து 412 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
மேலும் இது குறிóத்து மின்துறை அதிகாரிகள் கூறியது, வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் இணைப்புகளில் பெறுகின்ற மின்சாரத்தை வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். புதியதாக கட்டுமான பணி நடந்தால் அதற்கு தனியாக மின் இணைப்பு வைப்புத்தொகை செலுத்தி இணைப்பு பெற வேண்டும். இதனை மீறி இணைப்பு பெறாமல் மின்சாரம் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குடிசைகளுக்கு வழங்கப்பட்ட ஒரு பல்பு இணைப்பில் அரசாங்கம் வழங்கும் மின் கருவிகளை தவிர்த்து வேறு எந்த சாதனத்தையும் இணைக்க கூடாது. மேலும் குடியிருப்பு பகுதி 250 சதுர அடிக்குள் இருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கட்டண மின் இணைப்பிற்கு மாற்றிக்கொள்ள
வேண்டும். என்று தெரிவித்தனர்.