விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கிமரம் வெட்டும் தொழிலாளி சாவு
விருதுநகர் அருகே மரம் வெட்டும் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர் திங்கள்கிழமை மாலையில் உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே மரம் வெட்டும் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர் திங்கள்கிழமை மாலையில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக ஆமத்தூர் போலீஸார் கூறியதாவது: விருதுநகர் அருகே பாவாலியைச் சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் பாண்டி(40). இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். விருதுநகர்-அழகாபுரி சாலையில் உள்ள சந்திரிகிரிபுரம் கிராமத்தில் தனியார் தீப்பெட்டி தொழிற்சாலை ஓரத்தில் மரம் வெட்டும் வேலை நடைபெற்று வந்தது. இதில், ஒன்றுக்கும் மேற்பட்டோர்கள் வரையில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் மாலையில் 4 மணிக்கு வேலை முடியும் அவசரத்தில் மரத்தில் மேல் பகுதியில் கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாரத விதமாக தவறி மின்கம்பியில் விழுந்ததில் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இது தொடர்பாக அவர் உறவினர் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதையடுத்து விரைந்து வந்த போலீஸார் பாண்டியின் சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement