தற்போதைய செய்திகள்

சேலம் கஞ்சமலையில் ஆணின் எலும்புக் கூடு மீட்பு

சேலம் கஞ்சமலையில் ஆணின் எலும்புக் கூடு கிடப்பது இன்று தெரிய வந்துள்ளது. அதை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

க. தங்கராஜா

சேலம் கஞ்சமலையில் ஆணின் எலும்புக் கூடு கிடப்பது இன்று தெரிய வந்துள்ளது. அதை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இளம்பிள்ளை அருகேயுள்ள கஞ்சமலையின் உச்சியில் ஆண் ஒருவரின் எலும்புக் கூடு கிடப்பதாக இரும்பாலை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், கூடுதல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

 சடலத்தின் அருகில் அதிமுக கரை வேஷ்டி, வெள்ளை சட்டை, சந்தன நிற சால்வை ஆகியவை கிடந்தன. அந்த நபர் இறந்து பல வாரங்கள் இருக்கும் என்பதால் வெறும் எலும்புக் கூடு மட்டும் கிடப்பது தெரிய வந்துள்ளது.

 அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து இரும்பாலை காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT