தற்போதைய செய்திகள்

ஆரணியில் வன்கொடுமை சட்டத்தின்கீழ் 6 பேர் மீது வழக்குப்பதிவு: 4 பேர் கைது.

ஆரணியில் வன்கொடுமை சட்டத்தின்கீழ் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 4 பேரை போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்தனர்

பி.ஜெயச்சந்திரன்

ஆரணியில் வன்கொடுமை சட்டத்தின்கீழ் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 4 பேரை போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்தனர்.

 ஆரணி அருணகிரிசத்திரம் கண்ணகி நகரை சேர்ந்த அசோக்குமார்(20) என்பவர் திங்கள்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள செல்போன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த களத்துமேட்டுத்தெருவைச் சேர்ந்த விக்கி, தனசேகர், மணிகண்டன், செல்வம், தருமன், அருண் ஆகிய 6 பேர் செல்போன் கடையில் எங்களுக்கு முதலில் செல்போனில் பாட்டு இறக்கித்தா என்று கூறியுள்ளனர். மேலும் அங்கு இருந்த அசோக்குமாரை பார்த்து கண்ணகி நகரைச் சேர்ந்தவன்தானே நீ என்று சாதி பெயரை கூறி வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

 மேலும் அசோக்குமாரை 6 பேர் சேர்ந்த கட்டையால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிலர் தடுக்க வந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த அசோக்குமார், முரளி ஆகியோர் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். மேலும் இது குறித்து ஆரணி நகர போலீஸில் அசோக்குமார் புகார் கொடுத்தார். இதன் பேரில் ஆரணி டிஎஸ்பி என்.மணி, இன்ஸ்பெக்டர் தாஹீரா ஆகியோர் மதி மகன் விக்கி(19), முனுசாமி மகன் தனசேகர்(39), பாலாஜி மகன் மணிகண்டன்(19), குமார் மகன் செல்வம்(19) ஆகியோர் வன்கொடுமை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும் பொன்னுசாமி மகன் தருமன், குமார் மகன் அருள் ஆகிய இருவர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT