முகப்பு
தற்போதைய செய்திகள்

கொத்தட்டை கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் திருநங்கைகள் உற்சாகத்துடன் பங்கேற்பு

சிதம்பரத்தை அடுத்த கொத்தட்டை கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் குஜராஜ், புதுதில்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மாவட்டங்களிலிருந்து திருநங்கைகள் பங்கேற்றனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:51 AM
பகிர்:

சிதம்பரத்தை அடுத்த கொத்தட்டை கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் குஜராஜ், புதுதில்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மாவட்டங்களிலிருந்து திருநங்கைகள் பங்கேற்றனர்.

மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமானால் அனைத்து அம்சங்களும் பொருந்திய ஒரு ஆண் மகனை யுத்த தேவதைக்கு களப்பலி கொடுக்க தேடினார்கள். அப்போது அதற்கு அரவாண் தகுதி உடையவனாக இருந்தான். களப்பலிக்காக அரவாணை அணுகி கேட்ட போது அவன் சம்மதம் தெரிவித்தார். ஆனால் அதோடு நிபந்தனையும் விதித்தான். யுத்த தேவதைக்கு பலியாகும் முன்பு தனது திருமணம் நடந்து அந்த வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும என்றார். ஒரு இரவு மட்டுமே அரவாண் வாழ் முடியும் என்பதால் யாரும் அவரை மணம் செய்ய முன்வரவில்லை. அதனால் கிருஷ்ணர் மோகினி அவதாரம் எடுத்து அரவாணை திருமணம் செய்து அவரது ஆசையை பூர்த்தி செய்து பின்னர் அரவாணை யுத்த தேவதைக்கு களப்பலி ஆக்கினர். இதன் பிறகு மோகினி தாலி அறுத்தி மீண்டும் கிருஷ்ணராக அவதாரம் எடுக்கிறார். ஆனாகவும், பெண்ணாகவும் வாழ்த்த அரவாணைத்தான் திருநங்களை தங்களது இஷ்ட தெயவமாக வணங்கி வருகின்றனர். அரவாணின் மற்றொரு பெயர்தான் கூத்தாண்டவர்.

பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர்கள் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு கொடியேற்றி பெளர்ணமி தினத்தன்று திருநங்கைகள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா மே 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அர்ச்சுணன் தபசு. திரவுபதி திருக்கல்யாணம், சுவாமி வீதிஉலா நடைபெற்று வந்தது. முக்கிய விழாவான திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் தில்லி, மும்பை, குஜராஜ், பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திரளான திருநங்கைகள் பங்கேற்று கூத்தாண்டவரை வணங்கி பூசாரி ராமதாஸ் கைகளால் தாலி கட்டிக்கொண்டனர்.

பின்னர் திருநங்கைகளின் கும்மி, தப்பாட்டம்,  சிலம்பாட்டம், ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திரளான பொதுமக்கள் இந்நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.  புதன்கிழமை காலை தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தேர் மாலை நிலையை அடைந்தவுடன் முதல்நாள் இரவு கட்டிய தாலியை திருநங்கைகள் அறுத்து, வளையல்களை உடைத்து விதவை கோலம் பூண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.