அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி சாவு
சிதம்பரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையோரம் நடந்து சென்ற கூலித்தொழிலாளர் இறந்தார்.
சிதம்பரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையோரம் நடந்து சென்ற கூலித்தொழிலாளர் இறந்தார்.
சிதம்பரம் அருகே கொட்டாப்புளிச்சாவடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தங்கதுரை (40). இவர் வியாழக்கிழமை மாலை பி.முட்லூர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றுவிட்டது. இவ்விபத்தில் தங்கதுரை சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.