இரண்டாவது திருமணம் செய்ய முயற்சித்த கணவர் மீது இளம்பெண் புகார்
விருதுநகர் அருகே திருமணம் ஆன சில மாதங்களிலேயே இரண்டாவது திருமணம் செய்ய முயற்சி செய்த கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் மீது இளம்பெண் புகார் செய்துள்ளார்.
விருதுநகர் அருகே திருமணம் ஆன சில மாதங்களிலேயே இரண்டாவது திருமணம் செய்ய முயற்சி செய்த கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் மீது இளம்பெண் புகார் செய்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கூறியதாவது: விருதுநகர் அருகே குல்லூர்சந்தை அகதி முகாமைச் சேர்ந்தவர் தீபிகா(20). இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த காமராஜ்(22) என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், கடந்த சில நாள்களாகவே கணவன் மனைவிக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து, உன்னை பிடிக்கவில்லையெனவும், அதனால் இப்பகுதியைச் சேர்ந்த தங்கா(21) என்ற பெண்ணை திருமணம் செய்யப்போவதாகவும் கூறி வந்துள்ளார். இதற்கு எனது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனால், என்னை விட்டு பிரிந்து விவகாரத்து பெற வேண்டும் எனக் கூறியுள்ளார். இதற்கு தீபிகா மறுக்கவே அடித்து உதைத்து சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
Advertisement
எனவே இது தொடர்பாக விருதுநகர் சூலக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்திóல தீபிகா புகார் செய்தார். அதன் பேரிóல் போலீஸார் வழக்கு பதிவு செய்து கணவர் காமராஜ், மாமனார் ரெங்கநாதன் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், அவரது சகோதரி விஜிதா மற்றும் இரண்டாவது மணம் முடிக்க பேசிய பெண் தங்கா மற்றும் உறவினர் நோனா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.