சிதம்பரத்தில் ஸ்ரீகுருநமச்சிவாயர் குருபூஜை விழா
சிதம்பரம் வேங்கான்தெருவில் உள்ள திருப்பாற்கடல் மடத்தில் அமைந்துள்ள ஸ்ரீஆத்மநாதர் கோயிலில் ஸ்ரீகுருநமச்சிவாயர் குருபூஜை விழா வியாழக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.
சிதம்பரம் வேங்கான்தெருவில் உள்ள திருப்பாற்கடல் மடத்தில் அமைந்துள்ள ஸ்ரீஆத்மநாதர் கோயிலில் ஸ்ரீகுருநமச்சிவாயர் குருபூஜை விழா வியாழக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.
வேங்கான்தெருவில் திருபாற்கடல் மடத்தில் அமைந்துள்ள ஆத்மநாதர் கோயிலை மாணிக்கவாசகர் கட்டி அங்கேயே தங்கியிருந்து வழிபட்டு வந்துள்ளார். அவருக்கு முன்பு பர்ணசாலை அமைத்து பதஞ்சலி, வியாக்கிரபாதர், குருநமச்சிவாயர் போன்ற முனிவர்கள் தங்கியிருந்து தவம் செய்த இடமாகும். குருநமச்சிவாயரின் பசியை போக்க அம்பிகை உணவு தந்த அருளிய இடம். குருநமச்சிவாயர் தவமிருந்து சமாதியான இடத்தில், அவருக்கு தனிக் கோயில் அமைந்துள்ளது. அதுபோன்று இங்குள்ள ஆத்மநாதர் கோயிலில் தங்யிருந்த சமயக்குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் திருவாசகத்தை சொல்ல அந்தணர் வடிவில் வந்த ஸ்ரீநடராஜப் பெருமான் எழுதி, இறுதியில் திருச்சிற்றம்பலமுடையான் என கையொப்பிட்டதாக வரலாறு கூறுகிறது.
அச்சிறப்பு வாய்ந்த குருநமச்சிவாயர் கோயிலில் வியாழக்கிழமை காலை சிவனடியார்கள் பங்கேற்ற சிவபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. 7 மணிக்கு ஹோமமும், 10 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவும், 12 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. குருபூஜை விழாவில் மெளன மடலாய மடாதிபதி ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை டிரஸ்டி வை.பசவராஜ் மற்றும் சிவத்தொண்டர்கள் செய்தனர்.