தற்போதைய செய்திகள்

கடலூரில் பெண் நடன கலைஞரிடம் நகை பறிப்பு

கடலூர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த பெண் நடன கலைஞரிடம் 5 பவுன் நகையை பறித்துச்சென்ற 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பெ. விஜயபாஸ்கர்

கடலூர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த பெண் நடன கலைஞரிடம் 5 பவுன் நகையை பறித்துச்சென்ற 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

 கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி கண்ணகி. இருவரும் நாட்டிய கலைஞர்கள்.  புதன்கிழமை இரவு திண்டிவனம் அருகே உள்ள இருட்டறை கிராமத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, பைக்கில் சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

 வியாழக்கிழமை அதிகாலை கடலூர் முதுநகர் அருகே சின்னகாரைக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் பைக்கில் பின்தொடர்ந்த 2 பேர் இவர்களை வழிமறித்துள்ளனர்.

 இதில் பைக்கில் பின்புறம் அமர்ந்திருந்தவர் கண்ணகி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த தாலி செயினை பறித்துக்கொண்டு கடலூர் மார்க்கமாக தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து முதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT