சாலையில் கிடந்த அண்ணாமலைப் பல்கலை விடைத்தாள்கள் பார்சல்: போலீஸாரிடம் ஒப்படைப்பு
கடலூர் விருத்தாசலம் அருகே எறும்பூரில் வெள்ளிக்கிழமை சாலையில் கிடைந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள்கள் கொண்ட இரு பார்சல்களை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடலூர் விருத்தாசலம் அருகே எறும்பூரில் வெள்ளிக்கிழமை சாலையில் கிடைந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள்கள் கொண்ட இரு பார்சல்களை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிதம்பரத்திலிருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் எறும்பூர் கிராமத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள்கள் கொண்ட சீலிட்ட இரு பார்சல்கள் வெவ்வேறு இடங்களில் சாலையில் வெள்ளிக்கிழமை கிடந்துள்ளது. அவ்வழியே சென்ற பொதுமக்கள் இருவர் பார்சல்களை எடுத்து ஒருவர் விருத்தாசலம் காவல் நிலையத்திலும், மற்றொருவர் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்திலும் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து இரு பகுதியைச் சேர்ந்த போலீஸார் பார்சல்களை பத்திரமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடி மையத்தில் மாணவர்கள் தேர்வு எழுதிய விடைத்தாள்கள் பார்சல்கள் என்றும், லாரியில் கொண்டு வந்த போது கீழே விழுந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.