முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகரில் வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு

விருதுநகரில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த வியாபாரி வீட்டில் மாடி வழியே இறங்கி ரூ.1.65 லட்சம் ரொக்கம் மற்றும் 10பவுன் நகை பொருள்கள் ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:25 PM

விருதுநகரில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த வியாபாரி வீட்டில் மாடி வழியே இறங்கி ரூ.1.65 லட்சம் ரொக்கம் மற்றும் 10பவுன் நகை பொருள்கள் ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

விருதுநகர் சின்னப்பள்ளிவாசல் அருகே அல்லிப்பிள்ளைராவுத்தர் தெருவைச் சேர்ந்தவர் மல்லையாகவுண்டர்(50). இவர் பஜாரில் காய்கறி வியாபாரம் நடத்தி  வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு ஒரு நாள் வசூலான ரூ.1.65 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு பீரோவில் பத்திரமாக வைத்து விட்டு, வீட்டில் உள்ள அனைவரும் தூங்கியுள்ளனர். நள்ளிரவுக்கு பின் யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மாடி வாசல் வழியே இறங்கி வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அங்கு பீரோவை உடைத்து உள்ளே இருந்து ரொக்கப்பணம் மற்றும் 3 மோதிரம், தங்க காசுகள் சில்லரை பொருள்களாக 10 பவுன் நகை ஆகியவற்றை திருடிக் கொண்டு சென்று உள்ளனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காய்கறி வழங்கியவர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பிற்பகல் பீரோவில் வைத்த பணத்தை எடுப்பதற்காக சென்று பார்த்துள்ளார். அங்கு, திறந்த நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அப்போது மோப்ப நாய் தெரு முடிவு வரையில் சென்று மறுபடியும் திருட்டு சம்பவம் நடந்த வீட்டிற்கு முன்புறம் நின்றது. இது தொடர்பாக விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் மல்லையா கவுண்டர் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து மாடி வழியே இறங்கி நகை மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.