முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் ஸ்ரீமகா தட்சிணாமூர்த்திக்கு லட்சார்ச்சனை!

மே 27-ம் தேதி திங்கள்கிழமை ஸ்ரீமகாகணபதி ஹோமம், ஸ்ரீகன்னிகாபரமேஸ்வரிக்கு அபிஷேக ஆராதனை, கலசங்கள் ஆவாஹனம், கலசங்களுக்கு உபசார பூஜைகள். மாலை 6 மணிக்கு தேவார இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மே 28-ம் தேதி (இன்று) செவ்வாய்க்கிழமை இரவு 9.10

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:56 AM
பகிர்:

குருபெயர்ச்சியை முன்னிட்டு ஸ்ரீவேதபாஸ்கர மஹாயக்ஞ மண்டலி சார்பில் சிதம்பரம் மேலவீதி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஸ்ரீமகா தட்சிணாமூர்த்திக்கு லட்சார்ச்சனையும், வீதிஉலா நிகழ்ச்சியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மே 27-ம் தேதி திங்கள்கிழமை ஸ்ரீமகாகணபதி ஹோமம், ஸ்ரீகன்னிகாபரமேஸ்வரிக்கு அபிஷேக ஆராதனை, கலசங்கள் ஆவாஹனம், கலசங்களுக்கு உபசார பூஜைகள். மாலை 6 மணிக்கு தேவார இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மே 28-ம் தேதி (இன்று) செவ்வாய்க்கிழமை இரவு 9.10 மணிக்கு குருபகவவான் ரிஷப ராசியிலிருந்து, மிதுன ராசிக்கும் பிரவேசிப்பதால் செவ்வாய்க்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் சிறப்பு மகாயாகம் தொடங்கி நவக்கிரக ஹோமம், சகல த்ரவ்யாஹூதி வசோத்தாரா ஹோமம் மற்றும் மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்கு ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு 29 திரவியங்களால் மகா அபிஷேகமும், பின்னர் இரவு 9 மணிக்கு மேல் மகா தீபாராதணை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை மண்டலி நிர்வாகி ஜி.ஆர்.வேம்புதீட்சிதர் செய்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →