முகப்பு
தற்போதைய செய்திகள்

மனைவி தீக்குளிப்பு: காப்பாற்றச் சென்ற கணவர் சாவு

சிதம்பரத்தை அடுத்த ஜெயங்கொண்டப்பட்டினம் அம்பிகாபுரத்தைச் சேர்ந்த மணிவாசகம் (40). லாரி டிரைவரான இவரது தங்கை திருமணம் மே 29-ம் தேதி நடைபெறவுள்ளது. தங்கைக்கு சீர்வரிசை செய்வது குறித்து மணிவாசகத்திற்கும், அவரது மனைவி ராமசுந்தரிக்கும் (35) ஞாயிற்றுக்கிழமை

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:56 AM
பகிர்:

சிதம்பரம் அருகே மனைவி தீக்குளித்ததை தடுக்கச் சென்ற கணவர் தீக்காயமுற்று படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

சிதம்பரத்தை அடுத்த ஜெயங்கொண்டப்பட்டினம் அம்பிகாபுரத்தைச் சேர்ந்த மணிவாசகம் (40). லாரி டிரைவரான இவரது தங்கை திருமணம் மே 29-ம் தேதி நடைபெறவுள்ளது. தங்கைக்கு சீர்வரிசை செய்வது குறித்து மணிவாசகத்திற்கும், அவரது மனைவி ராமசுந்தரிக்கும் (35) ஞாயிற்றுக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராமசுந்தரிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதனை தடுக்க முயன்ற கணவர் மணிவாசகம் மீது தீப்பற்றி படுகாயமுற்றார். இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதி்ல் கணவர் மணிவாசகம் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். மனைவி ராமசுந்தரி கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →