தற்போதைய செய்திகள்

சவப்பெட்டி சரியில்லை என்றவருக்கு சராமரி அடி உதை: 4 பேர் மீது வழக்கு பதிவு

இனாம்ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் என்பவரின் மகன் ஜெயக்குமார்(38). இவர் கிராமத்தில் உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றார். அதையடுத்து இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்று மயானம் வரையில் உடன்  சென்றார். அங்கு மயானத்தில் அருகில்

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே சவப்பெட்டி சரியில்லை எனக் கூறிய இளைஞரை கிராமத்தினர் சராமரியாக அடித்து தாக்கியது தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இனாம்ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் என்பவரின் மகன் ஜெயக்குமார்(38). இவர் கிராமத்தில் உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றார். அதையடுத்து இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்று மயானம் வரையில் உடன்  சென்றார். அங்கு மயானத்தில் அருகில் உள்ளவர்களிடம் தரையில் குளி அகலமாக இல்லையென்றும், அதற்கேற்ப சவப்பெட்டியும் சரியில்லையென அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். அதைக் கேட்டு அருகில் இருப்பவர்கள் தான் வாங்கி வந்ததாக கூறியுள்ளனர்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ராமச்சநதிரன், ரூபன், கணேசன், அண்ணாமலை உள்ளிட்ட கோஷ்டியினர் ஜெயக்குமாரை தாக்க வந்துள்ளனர். அந்த இடத்தில் இருந்தவர்கள் விலகிவிட்டனர். பின்னர் வீட்டருகே வரும் போது 4 பேரும் சேர்ந்து கம்பு மற்றும் கையால் ஜெயக்குமாரை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக சூலக்கரை காவல் நிலையத்தில் ஜெயக்குமார் புகார் செய்தார். அதன் பேரி்ல் போலீஸார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT