மானாமதுரை அருகே பெண் கழுத்தை அறுத்து தற்கொலை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பெண் ஒருவர் தனது கழுத்தை கத்தியால் அறுத்து தற்கொலை செய்து கொண்டார். மானாமதுரை அருகே சிறுகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி எல்லம்மாள்(34) இவர் அடிக்கடி இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பெண் ஒருவர் தனது கழுத்தை கத்தியால் அறுத்து தற்கொலை செய்து கொண்டார். மானாமதுரை அருகே சிறுகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி எல்லம்மாள்(34) இவர் அடிக்கடி இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த எல்லம்மாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். அதன்பின் கையையும் அறுத்துக் கொண்டார். பின்னர் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார். அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் இதைப் பார்த்து எல்லம்மாளை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி எல்லம்மாள் இறந்தார். மானாமதுரை சிப்காட் போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.