ஆட்சியர் அலுவலகத்தில் பயன்படுத்தாமல் வெளியில் வீசப்பட்ட மண்பானைகள்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும், அதைச் சுற்றிலும் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களின் குடிநீர் உபயோகத்திற்காக மண்பானைகள் உபயோகப்படுத்தப்பட்டன. இப்பானை ஏழைகளின் குளிர் சாதன பெட்டியாகவும்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்பானைகளை பயன்படுத்தாமல் வீனாக வெளியில் வீசியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும், அதைச் சுற்றிலும் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களின் குடிநீர் உபயோகத்திற்காக மண்பானைகள் உபயோகப்படுத்தப்பட்டன. இப்பானை ஏழைகளின் குளிர் சாதன பெட்டியாகவும் விளங்கியதால், அனைத்து அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் உபயோகத்தில் இருந்தது.
தற்போது, அரசு அலுவலகங்களில் சுத்தகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கேன்களில் உள்ள குடிநீரை உபயோகப்படுத்தி வருகின்றனர். இதனால், மண்பானைகளின் உபயோகம் படிப்படியாக குறைந்து, அதற்கு பதிலாக பிளாஸ்டிக் கேன்களை உபயோகிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. மேலும், இது அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும், அதோடு மக்கும் தன்மையில்லாத நிலையை உடையதால் பூமியில் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் நிலையிலும் பிளாஸ்டிக் கேன்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் விலை அதிகம் கொடுத்து வாங்கப்பட்ட மண்பானைகளில் குடிதண்ணீர் பிடித்து வைப்பதற்க்கு பயன்படுத்தாமல் வெளியில் வீணாக வீசியுள்ளனர்.
Advertisement
இது குறித்து ஆவண காப்பாக அலுவலகத்திற்கு பதிவேடு சரிபார்ப்பதற்காக வந்த ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணன்(34) என்பவர் கூறுகையில், மண்பானைகளின் அருமை தெரியாமல் வெளியில் வீசியுள்ளனர். ஏழைகளின் குளிர்சாதனப் பெட்டி, கோடைக்காலத்தில் மண்பானையில் தண்ணீர் பிடித்து வைத்து குளிர்ச்சியாக இருக்கும்.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேர்கள் ஆட்சியர் அலுவலகம் வந்து செல்கிறவர்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலையிருக்கிறது. எனவே அவர்களின் தாகம் தீர்க்கும் வகையில் ஆட்சியர் அலுவலக சாலை ஓரங்களிலும், மரங்கள் அடியிலும் இந்த பானைகளில் தண்ணீர் பிடித்து வைப்பதற்கு பயன்படுத்தலாமே என தெரிவித்தார்.