ஜமாபந்தியில் சிதம்பரம் நகர குறைபாடுகள் குறித்து உதவிஆட்சியரிடம் மனு!
பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தெப்ப உற்சவம் நடைபெறும் ஞானப்பிரகாசம் குளம் ஆகாயத்தாமரை படர்ந்து படித்துறைகள் அசுத்தமாக உள்ளது. இதனால் கடந்த 7 வருடங்களாக தெப்ப உற்சவம் நடைபெறவில்லை. எனவே ஞானப்பிரகாசம் குளத்தை தூர்வாரி
சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் ஜமாபந்தி அதிகாரியும், உதவி ஆட்சியருமான எல்.சுப்பிரமணியத்திடம் நகரில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யக் கோரி கடலூர் மாவட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் துணைத் தலைவர் கருத்தான்செட்டியார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தெப்ப உற்சவம் நடைபெறும் ஞானப்பிரகாசம் குளம் ஆகாயத்தாமரை படர்ந்து படித்துறைகள் அசுத்தமாக உள்ளது. இதனால் கடந்த 7 வருடங்களாக தெப்ப உற்சவம் நடைபெறவில்லை. எனவே ஞானப்பிரகாசம் குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்தி தெப்ப உற்சவம் நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும். சிதம்பரம் புளீஸ்வரமேடு இடுகாட்டில் எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும். நகர வீதிகளில் சாலையோரம் உள்ள மண்ணை அகற்ற வேண்டும்.
அரசு மருத்துவமனையில் வெளிப்புறத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பொது குடிநீர் குழாய் அமைக்க வேண்டும். சிதம்பரம்-சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம்தாங்கி அம்மன் கோயில் அருகே உள்ள பாலம் குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அந்த பாலத்தை அகலப்படுத்த வேண்டும். சிதம்பரம் நகரில் இரவு நேரங்களில் நடைபெற்று வரும் தொடர் திருட்டினை தடுக்க போலீஸார் இரவு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.