முகப்பு
தற்போதைய செய்திகள்

மானாமதுரையில் பள்ளி மாணவியை கடத்திய இளைஞர் கைது

இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் தவமுனி வழக்கு பதிந்து முத்துப்பாண்டியை கைது செய்து இவரது வீட்டிலிருந்த பிரியாவை மீட்டு அவரது தாயிடம் ஒப்படைத்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:57 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பள்ளி மாணவியை கடத்திய இளைஞர்  கைது செய்யப்பட்டார்.

மானாமதுரை உடைகுளம் பகுதியைச் சேர்ந்த சேகர், கண்ணகி தம்பதியினரின்  மகள் பிரியா(16) இவர் இங்குள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். இந் நிலையில் இதே பகுதியில் வசிக்கும் கருப்புச்சாமி மகன் முத்துப்பாண்டி(21) பிரியாவை கடத்திச் சென்றுவிட்டார். இது குறித்து பிரியாவின் தாய் கண்ணகி மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மகள் பிரியாவை முத்துப்பாண்டி கடத்திச் சென்று அவரது வீட்டில் வைத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் தவமுனி வழக்கு பதிந்து முத்துப்பாண்டியை கைது செய்து இவரது வீட்டிலிருந்த பிரியாவை மீட்டு அவரது தாயிடம் ஒப்படைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.