முகப்பு
தற்போதைய செய்திகள்

முதியவர் அடித்து கொலை: மருமகன் கைது

சிதம்பரம் அருகே உள்ள வடமூர் காலனியைச் சேர்ந்த அப்பாதுரை (70).  நடுநிலைப்பள்ளி ஓய்வு பெற்ற கிளார்க்கான இவர்  நேற்று(புதன்கிழமை) மாலை சிதம்பரம் நகருக்கு பஸ்ஸில் வந்துவிட்டு ஊர் திரும்பினார். வடமூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஊருக்குள் நடந்து சென்று கொண்டிருந்த போது

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:58 AM
பகிர்:

சிதம்பரம் அருகே வடமூரில்  நேற்று(புதன்கிழமை) மாலை முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மருமகனை போலீஸார் கைது செய்துள்ளனர். அப்பாவிற்கும், மகளுக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் மருமகன், மாமனாரை கொலை செய்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிதம்பரம் அருகே உள்ள வடமூர் காலனியைச் சேர்ந்த அப்பாதுரை (70).  நடுநிலைப்பள்ளி ஓய்வு பெற்ற கிளார்க்கான இவர்  நேற்று(புதன்கிழமை) மாலை சிதம்பரம் நகருக்கு பஸ்ஸில் வந்துவிட்டு ஊர் திரும்பினார். வடமூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஊருக்குள் நடந்து சென்று கொண்டிருந்த போது மர்மநபரால் தலையில் தாக்க்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பி.முருகானந்தம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் மாமனார் அப்பாதுரையை, காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள தெற்குவிருதாங்கன் கிராமத்தைச் சேர்ந்த மருமகன் செந்தில்குமார் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சிதம்பரம் ஓமக்குளம் பஸ்நிறுத்தத்தில் செந்தில்குமாரை (40) போலீஸார் கைது செய்தனர்.

அப்பதுரை மகள் சத்யாவிற்கும், லாரி டிரைவரான செந்தில்குமாருக்கு கடந்த 13 வருடங்கள் முன்பு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சத்யா தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சிதம்பரம் ஓமக்குளத்தில் செந்தில்குமாரும், சத்தியாவும் வசித்து வந்தனர். சத்தியாவை பார்க்க அவரது தந்தை அப்பாதுரை அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வார் எனக்கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த செந்தில்குமார், அப்பா அண்ணாதுரைக்கும், மகள் சந்தியாவிற்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறி கொலை செய்ததாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →