திருக்கோவிலூர் அருகே பஸ் கவிழ்ந்து 30 பேர் காயம்
திருக்கோவிலூர் அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்து 30 பேர் காயம் அடைந்தனர்.
திருக்கோவிலூர் அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்து 30 பேர் காயம் அடைந்தனர்.
திருக்கோவிலூரை அடுத்த திருவெண்ணெய்நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் 53 பேர் ஒரு சுற்றுலா பஸ்ஸில் பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றுவிட்டு தங்கள் ஊருக்குத் திரும்பினர். அவர்கள் திருக்கோவிலூரை அடுத்த சுந்தரேசபுரம் பகுதிக்கு வந்தபோது, எதிரே வந்த லாரிக்கு வழிவிட்டு சாலையில் ஒதுங்கியபோது, சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 30 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் திருக்கோவிலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.