தருமபுரியில் பருவ மழை பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க எண் அறிவிப்பு
தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து பாதிப்புகளை 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து பாதிப்புகளை 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள காரணத்தினால் வீடுகள் சேதம், கால்நடை சேதம், தீவிபத்து குறித்த உள்ளிட்ட பாதுப்புகள் குறித்து தகவலை மாவட்ட ஆட்சியர் அலுவலக இலவச தொலைபேசி எண் 1077-ல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாரகள். இந்த புகார் மற்றும் தவகல்களை பெற 24 மணி நேரமும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இயற்கை இடர்பாடுகளின்போது துறை வாரியாக துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர் உள்பட மாவட்டத்திலுளஅள அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது