தற்போதைய செய்திகள்

டீசல் விலையேற்றத்துக்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு

எண்ணெய் நிறுவனங்கள் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் உயர்த்தியுள்ள டீசல் விலையேற்றத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

தமிழ்ச்செல்வன்

எண்ணெய் நிறுவனங்கள் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் உயர்த்தியுள்ள டீசல் விலையேற்றத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

மாதந்தோறும் உயர்த்தப்படும் இந்த டீசல் விலையேற்றத்தால் லாரித் தொழில் மென்மேலும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் செய்து வருவதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.15 குறைத்தும், டீசல் விலை லிட்டருக்கு 50 காசு உயர்த்தியும் அமல்படுத்தியுள்ளன. இதில், மாநில அரசின் விற்பனை வரியை சேர்க்கும்போது தமிழகத்தில் டீசல் லிட்டருக்கு 53 காசுகள் உயர்ந்துள்ளது.

ஜனவரி 1-ம் தேதி முதல் 12-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ள இந்த டீசல் விலையேற்றத்தால் லாரி போக்குவரத்துத் தொழிலை பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் குற்றஞ்சாட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT