சிதம்பரம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கொடிக்கம்பம் சேதம்: சாலைமறியல்
சிதம்பரம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிமேடை, கல்வெட்டு சேதப்படுத்தியதை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை சாலைமறியல் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிதம்பரம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிமேடை, கல்வெட்டு சேதப்படுத்தியதை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை சாலைமறியல் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிதம்பரம் அருகே உள்ள கீழநத்தம் கிராமத்தில் பஸ்நிறுத்தம் அருகே இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பத்தின் கொடிமேடை மற்றும் கல்வெட்டு மர்மநபர்களால் சேதப்பட்டது. இதனை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முகாம் செயலாளர் பார்த்தீபன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சிதம்பரம் தாலுக்கா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்பராயலு மற்றும் போலீஸார் சென்று பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்தை அடுத்து மறியல் வாபஸ் பெறப்பட்டது. இதனால் சிதம்பரம்- சேத்தியாத்தோப்பு போக்குவரத்து 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.