முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் தில்லைக்காளிக்கு மகாபிஷேகம்

பிரசித்தி பெற்ற சிதம்பரம் எல்லையில் வீற்றுள்ள ஸ்ரீதில்லைக்காளியம்மனுக்கு ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு மகாபிஷேகமும், 149-வது சிறப்பு அர்த்தசாம பூஜையும் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:35 PM
பகிர்:

பிரசித்தி பெற்ற சிதம்பரம் எல்லையில் வீற்றுள்ள ஸ்ரீதில்லைக்காளியம்மனுக்கு ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு மகாபிஷேகமும், 149-வது சிறப்பு அர்த்தசாம பூஜையும் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி, செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில் தீபம் ஏற்றி காளியை வழிபட்டால் தீராத கடன், பகைவர்கள் தொந்தரவு, பூர்வஜென்ம சாப தோஷங்கள் தீரும், சித்தம் தெளியும் என்பது ஐதீகமாகும்.

ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை இரவு ஸ்ரீதில்லைக்காளிக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. குடம், குடமாக நல்லெண்ணை அபிஷேகம் மற்றும் தைலகாப்பு, குங்குமகாப்பு செய்யப்பட்டு, வாசனை திரவியங்கள் மற்றும் வெண்பட்டு சாற்றப்பட்டு மற்றும் வெட்டிவேர், விலாமுச்சு வேர்களால் ஆன சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதில்லைக்காளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர் சிறப்பு அர்த்தசாமபூஜை நடைபெற்றது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று மகாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர். மகாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை அமாவாசை அர்த்தசாம அபிஷேக மண்டலி ஒருங்கிணைப்பாளர் எஸ்.வைத்தியநாதன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.