முகப்பு
தற்போதைய செய்திகள்

நிர்வாண நிலையில் இளம்பெண் தீயில் கருகி சாவு: மர்ம மரணம் என உறவினர்கள் சாலைமறியல்

காட்டுமன்னார்கோயில் அருகே திருமணமான இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் தீயில் கருதி இறந்துகிடந்தார். பெண் சாவில் மர்மம் உள்ளதாகவும், தீவைத்து எரித்த கணவர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி சிதம்பரம் அரசு மருத்துவமனை முன்பு அப்பெண்ணி பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:35 PM
பகிர்:

காட்டுமன்னார்கோயில் அருகே திருமணமான இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் தீயில் கருதி இறந்துகிடந்தார். பெண் சாவில் மர்மம் உள்ளதாகவும், தீவைத்து எரித்த கணவர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி சிதம்பரம் அரசு மருத்துவமனை முன்பு அப்பெண்ணி பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஆட்கொண்டநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தபாபு (22). டாடா மினிடோர் லாரி டிரைவரான இவரும் சுதா (21) என்ற பெண்ணும் காதலித்து கடந்த 2 வருடங்கள் முன்பு ஊர் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இருவரும் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ரம்ஜான் தைக்காலில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஆனந்தபாபுவிற்கும், சுதாவிற்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் சுதா நிர்வாண நிலையில் தீயில் எரிந்த நிலையில் இறந்து கிடப்பதாக அவரது பெற்றோர் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த காட்டுமன்னார்கோயில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காட்டுமன்னார்கோயில் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கணவர் ஆனந்தபாபு நகை மற்றும் மோட்டார் சைக்கிள் கேட்டு சுதாவை அடித்து கொலை செய்து தீவைத்துள்ளார். எனவே வழக்கை கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் அரசு மருத்துவமனை முன்பு ஞாயிற்றுக்கிழமை காலை சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் சென்று பேச்சுவார்த்தை நடத்தி பிரதே பரிசோதனை செய்து அறிக்கை பெற்ற பின்னர் தக்க நடவடிக்கை எடுப்பதாக சமரசப்படுத்தி மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.