முகப்பு
தற்போதைய செய்திகள்

தீபாவளி : காமராஜர் சிலைக்கு புத்தாடை அணிவிப்பு; ஈரோட்டில் பரபரப்பு

ஈரோட்டில் உள்ள காமராஜர் உருவச் சிலைக்கு தீபாவளி புத்தாடை அணிவிக்கப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:36 PM
பகிர்:

ஈரோட்டில் உள்ள காமராஜர் உருவச் சிலைக்கு தீபாவளி புத்தாடை அணிவிக்கப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனை அருகே எம்ஜிஆர் சிலை சிக்னல் உள்ளது. இந்த நான்கு சாலை சந்திப்பில் எம்.ஜி.ஆர்., காமராஜர் ஆகியோரின் முழு உருவச்சிலைகளும், ஈவிகே.சம்பத்தின் மார்பளவுச்சிலையும் உள்ளன.

இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளியையொட்டி காமராஜர் சிலைக்கு யாரோ ஒருவர் வேட்டி, ஜிப்பா, துண்டு அணிவித்துள்ளார்.

 தீபாவளி தினமான சனிக்கிழமை இந்த புத்தாடை அணிவிக்கப்படவில்லை.  ஞாயிற்றுக்கிழமை இரவு தான் இந்த உடையை யாரோ அணிவித்துள்ளனர். புத்தாடையை பார்க்கும்போது சிலைக்கு அளவு எடுத்து அதற்கேற்ற வகையில் தைத்து அணிவித்தது போல இருப்பதாக இதைப் பார்த்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

அவ்வழியாக பயணித்த வாகன ஓட்டிகள், பேருந்து பயணிகள், பாதசாரிகள் இச்சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த புத்தாடையை ஆச்சரியத்துடன்  பார்த்துச் சென்றனர். காமராஜர் சிலைக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டது ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.