தற்போதைய செய்திகள்

நாமக்கல்லில் குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

குரூப் 2 தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாமக்கல்லில் நடத்தப்பட உள்ளது.

தமிழ்ச்செல்வன்

குரூப் 2 தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாமக்கல்லில் நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள 1064 குரூப்-2 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 1-ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் நடத்தப்பட உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை (நவ.7) மாலை 4 மணி தொடங்கப்பட உள்ள இந்த பயிற்சி வகுப்பில் குரூப் 2 தேர்வு எழுத விணணப்பித்துள்ளவர்கள் சேர்ந்து பயன்பெறலாம்.

அதற்கு தேர்வுக்கு விண்ணப்பித்ததற்கான விவரங்களை நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெறலாம் என ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT