அரசு மதுபானக் கடையில் ரூ.4.22 லட்சம் பணம் கையாடல் செய்யப்பட்டதாகப் புகார்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், கோவிலூரில் அரசுக்குச் சொந்தமான மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடையில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்ட போது விற்பனைத் தொகை ரூ.4.22 லட்சத்தை
அரசுக்குச் சொந்தமான மதுபானக் கடையில், விற்பனைத் தொகை ரூ.4.22 லட்சத்தை செலுத்தாமல் விற்பனையாளர் கையாடல் செய்ததாகப் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், கோவிலூரில் அரசுக்குச் சொந்தமான மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடையில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்ட போது விற்பனைத் தொகை ரூ.4.22 லட்சத்தை அரசுக் கணக்கில் விற்பனையாளர் அன்பழகன் என்பவர் செலுத்தாமல் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து டாஸ்மாக் நிறுவன மாவட்ட மேலாளர் கோபிநாத் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.