முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் தொடரும் மழை: நீதிமன்ற கட்டட மேற்கூரை காரைகள் உடைந்து விழுந்தன!

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் திங்கள்கிழமை முதல் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்மழையினால் நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:38 PM
பகிர்:

சிதம்பரம் பகுதியில் பெய்து வரும் கனமழையில் நீதிமன்ற கட்டடத்தின் மேற்கூரையிலிருந்து காரைகள் உடைந்து விழுந்தன.

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் திங்கள்கிழமை முதல் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்மழையினால் நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் நீர்தேங்கி சேதமுற்று காட்சியளிக்கின்றன. புதன்கிழமை அதிகாலை சிதம்பரம் நீதிமன்ற வளாகத்தில் விரைவுநீதிமன்ற அமைந்துள்ள கட்டடத்தின் மேற்கூரையில் உள்ள காரைகள் உடைந்து விழுந்தன. காற்று, கனமழையினால் சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார ஓயர்கள் அறுந்து சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் பல்வேறு கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மழைவிபரம்: சேத்தியாத்தோப்பு- 50 மி.மீ, லால்பேட்டை- 50 மி.மீ, சிதம்பரம்-26 மி.மீ, காட்டுமன்னார்கோயில்- 40 மி.மீ, பரங்கிப்பேட்டை- 23 மி.மீ, ஸ்ரீமுஷ்ணம்- 26 மி.மீ, அண்ணாமலைநகர்- 20 மி.மீ, புவனகிரி- 29 மி.மீ.

வீராணம்ஏரியில் 44.50 அடியை நீர் எட்டியது:

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரியின் மொத்தக் கொள்ளவு 47.50 அடியாகும். புதன்கிழமை நிலவரப்படி ஏரியில் 44.50 அடி நீர் உள்ளது. கீழணையிலிருந்து வடவாறு வழியாக ஏரிக்கு விநாடிக்கு 1100 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 73 கனஅடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது. சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு முழுக்கொள்ளவு 7 அடியாகும். தற்போது 6.3 அடி நீர் உள்ளது. அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு அரியகோஷ்டி வாய்க்காலில் 42 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கீழணையில் 8.7 அடி நீர்: அணைக்கரையில் உள்ள கீழணையின் மொத்தக் கொள்ளளவு 9 அடியாகும். புதன்கிழமை நிலவரப்படி கீழணையில் 8.7 அடி நீர் உள்ளது. கல்லணையிலிருந்து கீழணைக்கு 1002 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கீழணையிலிருந்து பாசனத்திற்கு 2056 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.