முகப்பு
தற்போதைய செய்திகள்

ரூ.5.58 கோடி செலவில் கால்நடை மருத்துவமனைகள்: வீடியோ கான்பரஸ் மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

கடலூர் மாவட்டத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 58 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அதிநவீந மற்றும் தரம் உயர்த்தப்பட்ட 21 கால்நடை மருத்துவமனைகளை

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:38 PM
பகிர்:

கடலூர் மாவட்டத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 58 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அதிநவீந மற்றும் தரம் உயர்த்தப்பட்ட 21 கால்நடை மருத்துவமனைகளை வீடியோ கான்பிரன்ஸ் முறையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை திறந்து வைத்தார்.

இந்த கட்டடங்களின் திறப்பு விழா காட்டுமன்னார்கோயிலில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார், நாக.முருகுமாறன் எம்எல்ஏ, பேரூராட்சி தலைவர் எம்ஜிஆர் தாசன், ஒன்றியக்குழுத் தலைவர் கே.மணிகண்டன் மற்றும் கால்நடைதுறை மருத்துவ அதிகாரிகள் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்டத்தில் தற்போது திறக்கப்பட்ட கட்டடங்கள் மூலம் 147 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள். சுமார் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 645 கால்நடைகள் பயன்பெறும் எனக்கூறப்படுகிறது. காட்டுமன்னார்கோயிலில் 26 லட்சத்து 66 மதிப்பிலான கால்நடை மருந்தக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்ஸ் மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.