முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக்கல்வி இயக்குநராக ஆர்.எம்.சந்திரசேகரன் பொறுப்பேற்பு

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறை பேராசிரியராக ஆர்.எம்.சந்திரசேகரன் 1990 ஆண்டு முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். இடையில் 2007-2010ல் திருச்சி

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:39 PM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக புதிய இயக்குநராக ஆர்.எம்.சந்திரசேகரன்  வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறை பேராசிரியராக ஆர்.எம்.சந்திரசேகரன் 1990 ஆண்டு முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். இடையில் 2007-2010ல் திருச்சி அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றியுள்ளார். பின்னர் மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவரை அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக புதிய இயக்குநராக பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு வியாழக்கிழமை பொறுப்பேற்றார். இதற்கு முன்பு இருந்த இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் மேலாண்மைத்துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.