தற்போதைய செய்திகள்

முதலுதவி தெரிந்த ரயில் பணியாளர்கள்: ஜப்பானில் முதியவருக்கு உடனடி மருத்துவ உதவி

நவம்பர் 9 இன்று காலை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து ஒசாகா செல்லும் அதிவேக புல்லட் ரயிலில் பயணித்த வயதான பயணி ஒருவர் கால் இடறிக் கீழே விழுந்தார்.

பாலு.சரவணன்

நவம்பர் 9 இன்று காலை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து ஒசாகா செல்லும் அதிவேக புல்லட் ரயிலில் பயணித்த வயதான பயணி ஒருவர் கால் இடறிக் கீழே விழுந்தார்.

உடன் இருந்த பயனிகள் அவசரகால அழைப்பு பொத்தானை அழுத்த ரயில்வே அதிகாரி சக ஊழியர்களுடன் அவசர மருத்துவ உபகரணங்களுடன் விரைந்து வந்தார். கீழே விழுந்து அடிபட்ட முதியவருக்கு உடனடி முதலுதவி செய்து, அவரை சக்கர நாற்காலியில் அமர வைத்தனர். அடுத்த ரயில் நிறுத்தத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. அங்கே, தயாராக இருந்த ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட அவர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முதலுதவி செய்வதற்குப் பயிற்சி கொடுக்கப்பட்டிருந்த ரயில் ஊழியர்களால் முதியவர் காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழியில் ஒருநாள் வழிபாட்டுக்கு ஆயிரம் ஆண்டுகள் பலன்!

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

உத்தர பிரதேச தொழிலாளி கொலை: நண்பா் கைது

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT