முகப்பு
தற்போதைய செய்திகள்

டீசலை வீணாக்கும் அரசு பஸ்கள்: விலை ஏற்றத்தினால் அல்லல்படும் அரசு போக்குவரத்துக்கழகம்

டீசல் விலை ஏற்றத்தினால் அல்லல்படும் நிலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இருக்க, மறுபுறம் டீசலை வீணாக்கும் நிலையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய செய்திகள்

டீசலை வீணாக்கும் அரசு பஸ்கள்: விலை ஏற்றத்தினால் அல்லல்படும் அரசு போக்குவரத்துக்கழகம்

டீசல் விலை ஏற்றத்தினால் அல்லல்படும் நிலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இருக்க, மறுபுறம் டீசலை வீணாக்கும் நிலையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:43 PM
பகிர்:

டீசல் விலை ஏற்றத்தினால் அல்லல்படும் நிலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இருக்க, மறுபுறம் டீசலை வீணாக்கும் நிலையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், மதுரை, கோவை, கும்பகோணம், சேலம் என 7 கோட்டங்கள் உள்ளன. இந்த 7 கோட்டங்களில் பல்லாயிரக்கான அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு இயக்கப்படும் அரசு பஸ்களில் 15 சதவீதத்திற்கு மேலான பஸ்கள் சரியான நேரத்திற்கு இயக்கப்படுவதில்லை. உரிய நேரத்திற்கு பணியாளர்கள் வாரதது,போக்குவரத்து நெரிசலில் பஸ்கள் சிக்கிக் கொள்வது, பழுதான பஸ்களை சரியான நேரத்திற்கு பழுது பார்த்து கொடுக்காததாது, பஸ் இன்ஜீன்களை சரியாக பராமரிக்காமல் இருப்பது போன்ற பலக் காரணங்களாகும். தடம் எண். 438 காஞ்சிபுரம் - சேலம் பேருந்துகள் சுமார் 10 க்கும் மேற்பட்டவை காஞ்சிபுரம் பணிமனையில் இருந்து பல வருடங்களுக்கு மேலாக நேரடியாக இயக்கப்பட்டு வந்தன.

வீணாக இயக்கப்படும் பஸ்கள்

காஞ்சிபுரத்தில் இருந்து சேலத்திற்கு இயக்கப்படும் வழித்தடம் திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலத்தில் அமைந்ததின் காரணமாக காஞ்சிபுரம் - சேலம் பேருந்துகளை திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலத்தினர் பெற்று செய்யாறு கிளை பஸ் மனை மூலம் சில மாதங்களாக இயக்கப்பட்டு வருகின்றனர்.

செய்யாறு கிளையில்...

தடம் எண்.438 காஞ்சிபுரம் - சேலம் பேருந்துகளை, செய்யாறில் இருந்து காஞ்சிபுரத்திற்கு இயக்கப்பட்டு காஞ்சிபுரம் - சேலம் என இயக்கப்படுகின்றன. அதேப் போல சேலம் - காஞ்சிபுரம் என இயக்கப்படுகிறது. பின்னர் ஊழியர்கள் டூட்டி மாறுதல், பஸ் சரிபார்த்தல் டீசல் பிடித்தல் போன்றக் காரணங்களுக்காக காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறுக்கு இயக்கப்படுகின்றன. 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செய்யாறு காஞ்சிபுரம் என இருமுறை சென்று வருவதால் 60 கி.மீட்டருக்கு ஒரு பஸ்சுக்கு 12 லிட்டருக்கு மேல் டீசல் வீணாகச் செலவு பிடிக்கிறது. இதேப் போல செய்யாறு கிளையில் இருந்து சேலத்திற்கு ஏழு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதோடு நின்றிவிடாமல் அதிக கி. மீட்டர் ஒட்டியதற்கு டிரைவர், கண்டருக்கு தலா ரூ.100 ரூபாய் வீதம் ஒவர் டைம் பேட்டாவும் வழங்கப்படுகிறது.

அதேப் போல தடம் எண்.555  ஆற்காடு - திருச்சி செல்லும் பேருந்து கடந்த ஒரு மாத காலமாக, திருச்சியில் இருந்து செய்யாறு வரை வந்த பேருந்தினை இரவில் ஆற்காட்டுக்கு இயக்கப்பட்டு, பின்னர் செய்யாறுக்கு நள்ளிரவில் இயக்கப்படுகிறது. 40 + 40 = 80  கி.மீட்டர் செல்லும் இந்த பஸ்சுக்கு நாளொன்றுக்கு சுமார் 9 லிட்டர் டீசல் செலவாகிறது. மேலும்,அதிக கி. மீட்டர் ஒட்டியதற்காக டிரைவர், கண்டருக்கு தலா ரூ.80 ரூபாய் வீதம் ஒவர் டைம் பேட்டாவும் வழங்கப்படுவதாகத் தெரிகிறது.

செய்யாறு பணிமனையில் இருந்து ஒசூருக்கு இயக்கப்படும் தடம் எண் 303 எச், 444  ஆகிய இரு பஸ்களும் காலை நேரத்தில் செய்யாறில் இருந்து வந்தவாசிக்கு இயக்கப்பட்டு பின்னர் செய்யாறு வழியாக ஒசூருக்கு இயக்கப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு பேருந்துக்கும் 50  கிலோ மீட்டருக்கு 10 லிட்டர் டீசல் வீணாகச்  செலவழிக்கப்படுகிறது.

வந்தவாசி கிளையில்...

வந்தவாசி கிளையில் இருந்து காஞ்சிபுரம் - சேலம் என நான்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களும்  வந்தவாசியில் இருந்து காஞ்சிபுரம் சென்று பின்னர் காஞ்சிபுரம் - சேலம் என இயக்கப்படுகின்றன, ஒவ்வொரு பேருந்துக்கும் ஒவ்வொரு நாளைக்கு 80 கி.மீட்டருக்கு 14  லிட்டருக்கு மேல் டீசல் வீணாக செலவாகிறது. அதோடு நில்லாமல் அதிக கி. மீட்டர் ஒட்டுவதற்காக டிரைவர், கண்டருக்கு தலா ரூ.80 ரூபாய் வீதம் பேட்டா வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை - சென்னை செல்லும் பேருந்துகளில் சில பஸ்கள் வந்தவாசி பணிமனையில் இருந்து இயக்கப்படுகிறது. சில பேருந்துகள் சென்னை காஞ்சிபுரம் வந்தவாசி என்றும், சில பேருந்துகள் சேத்பட் - வந்தவாசி கட் சர்வீசாகவும் இயக்கப்படுகிறது.

கோழி போய் குரல் போன...

போளூரில் இருந்து திருவண்ணாமலை, சேலம் எனவும், பின்னர் சேலம் - காஞ்சிபுரம், காஞ்சிபுரம் போளூர் என இயக்கப்படுகிறது. 90 கி.மீட்டர்தூரத்திற்கு 18 லிட்டர் டீசல் வீணாக செலவழிக்கப்பட்டு இயக்கப்படுகிறது.தேவையில்லாமல் நிர்வாகக் குளறுபடியால், செய்யாறு கிளையில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 200 லிட்டர் டீசலுக்கு சுமார் 11 ஆயிரம் வீணாகச் செலவாதுடன், அதிக கி. மீட்டர் ஒட்டியதற்காக ஊழியர்களுக்கு சுமார் தலா ரூ.1000  ரூபாய் வீதம் ஒவர் டைம் பேட்டாவும் வழங்கப்பட்டு வருவது நிர்வாகத்திற்கு அதிக செலவீனத்தை ஏற்படுத்து வருகிறது. இதனைப் பார்த்தால் கோழி போனது இல்லாமல் குரல் போனக் கதையாகவே உள்ளது.

விழிப்புணர்வு

டீசலை சேமிக்க, ஒட்டுனர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பதுடன் சாலைகளில் ஒரே சீரான வேகத்தில் பஸ்களை ஒட்டுவது, அடிக்கடி கீயர் போடாமல் ஒட்டுவது, அதிகப்படியாக எஸ்கிலேட்டரை மிதிக்காமல் பஸ்ஸை ஒட்டுவது போன்ற பலவிதமான பயிற்சிகளை ஒட்டுனர்களுக்கு அளித்து வருகிறது. மேலும், ஒரே சீரான வேகத்தில் பஸ்களை ஒட்டினால் டீசலை சேமிக்கலாம் என்று போக்குவரத்து அதிகாரிகள் வலியுறுத்தியும், டீசல் சிக்கனம் தேவை இக்கணம் என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை அரசு பஸ்களில் அதிகாரிகள் ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்து வருகின்றனர்.

ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு இயக்க வேண்டிய அரசு பஸ்களை நிர்வாக குளறுபடியால் கட் சர்வீஸ்களாக இயக்கபடும் வரும் இந்த அரசு பஸ்களில் பயணம் செய்யக் கூடிய பயணிகள் எண்ணிக்கையோ விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளனர். இதன் காரணமாக போக்குவரத்துக் கழகத்திற்கு உரிய வருமானம் கிடைக்காமலும், டீசல் வீணாகச் செலவு ஆவதுடன், ஊழியர்களுக்கு ஒவர் டைம் பேட்டா கொடுத்து வருவது வேதனையாக உள்ளது.

நேரடியாக இயக்கக் கோரிக்கை

ஒரு முனையில் இருந்து மறுமுனையில் செல்லும் வகையில், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தடம் எண்.438 காஞ்சிபுரம் - சேலம் செல்லும் அனைத்து பேருந்துகளை காஞ்சிபுரத்திலோ அல்லது  சேலத்தில் இருந்தோ இயக்க வேண்டும். செய்யாறு பணிமனையில் இருந்து வந்தவாசி சென்று ஒசூருக்கு இயக்கப்படும் தடம் எண் 333 எச், 444 ஆகிய பேருந்துகளை வந்தவாசி பணிமனையில் இருந்து நேரடியாக ஒசுருக்கு இயக்கிட வேண்டும்.

காஞ்சிபுரம் பணிமனையில் இருந்து செய்யாறு வரையில் இயக்கப்பட்டு பின்னர் செய்யாறு - திருப்பதி என இயக்கப்படும் பேருந்தை செய்யாறில் இருந்தும், தடம் எண்.555 திருச்சி பேருந்தை ஆற்காட்டில் இருந்தும், ஆற்காட்டில் இருந்து வேலூர் - மேல்மருவத்தூர் என இயக்கப்படும் தடம் 200 பேருந்துகளை வந்தவாசியில் இருந்து  நேரடியாக இயக்கி உதவிட வேண்டும் என்றும் பஸ் பயணிகளும், பொது நல வி்ரும்பிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுப் போன்று அரசு பஸ்களை இயக்கினால் பயணிகளுக்கு நேரடி பேருந்து வசதி கிடைப்பதுடன், தேவையில்லாமல் வீணாக செலவாகும் டீசலை சேமிக்கலாம்.   தேவையில்லாமல் பஸ் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஒ.டி. பேட்டாவையும் தவிர்ககலாம். மேலும், இலக்கைவிட அதிக கிலோ மீட்டர் தூரத்திற்கு தொடர்ந்து  பஸ்களை இயக்குவது தவிர்ப்பதுடன்,  பணி பளூக் காரணமாக ஏற்படும் விபத்துகளை குறைக்கலாம் என்றும், நிர்வாக வசதிக்கா இல்லாமல், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து அரசு பஸ்களையும் ஒரு முனையில் இருந்து மறுமுனையில் செல்லும் வகையில் இயக்கி உதவிட வேண்டும் பஸ் பயணிகள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →