முகப்பு
தற்போதைய செய்திகள்

மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க மார்க்சிஸ்ட் கம்யூ எம்எல்ஏ கோரிக்கை

கடிதத்தில் சிதம்பரம் அருகே பெராம்பட்டு திட்டுக்காட்டூர் கிராமத்தில் கடந்த நவ.3-ம் தேதி அதிகாலை சவுக்குத்தோப்பில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்து அரிதாஸ் (35), நா.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:44 PM
பகிர்:

சிதம்பரம் அருகே அறுந்து கிடந்த மின்சார ஒயரை மிதித்து இறந்த இருவரது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

கடிதத்தில் சிதம்பரம் அருகே பெராம்பட்டு திட்டுக்காட்டூர் கிராமத்தில் கடந்த நவ.3-ம் தேதி அதிகாலை சவுக்குத்தோப்பில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்து அரிதாஸ் (35), நா.சுப்பிரமணியன் (32) ஆகிய இருவரும் இறந்தனர். இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த அரிதாஸிற்கு சுமதி என்ற மனைவியும், மண்கண்டன் (12), சந்தியா (10), லோகேஷ் (9), சத்தியா (5) ஆகிய நான்கு குழந்தைகள் உள்ளனர். சுப்பிரமணியத்திற்கு சாந்தி என்ற மனைவியும், சுபாஷ் சந்திரபோஸ் (6), சுரேஷ் (10), ராஜேஸ்வரி (9) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். மேற்கண்ட இருகுடும்பத்தினருக்கும் வீடோ, வீட்டு மனையோ கிடையாது. எனவே குடும்பத் தலைவரை இழந்து நிற்கும் இருவரது குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.