தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் 10,12-வது போதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

விருதுநகர் மாவட்டத்தில் மார்ச், ஏப்ரல்-2014ல் நடைபெற இருக்கிற மேல்நிலை, இடைநிலைக் கல்வி திட்ட பொதுத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்களிடம் இருந்து வருகிற 15-ம் தேதி முதல், 25-ம் தேதி வரையில்

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் மார்ச், ஏப்ரல்-2014ல் நடைபெற இருக்கிற மேல்நிலை, இடைநிலைக் கல்வி திட்ட பொதுத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்களிடம் இருந்து வருகிற 15-ம் தேதி முதல், 25-ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறி்ப்பில் கூறியிருப்பதாவது:

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் www.tndge.in என்ற இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்க ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் குறிப்பிட்ட பள்ளிகளை ஒருங்கிணைப்பு மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜி.எஸ்.இந்து மேல்நிலைப்பள்ளி மற்றும்  விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தனித்தேர்வர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது. இங்கு தனித்தேர்வர்கள் புகைப்படம் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. இணைய புகைப்பட கருவி மூலம் புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

எனவே குறிப்பிட்ட நாள்களுக்குள் தனித்தேர்வர்கள் இந்த மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்ப கட்டணங்களைச் செலுத்தி பெயர்களை பதிவு செய்து பயனடைய வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT